நள்ளிரவு கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம் : கையொப்பமிட்டார் ஜனாதிபதி அநுர

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)கையொப்பமிட்டுள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது.

இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று (24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்திலிருந்து அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்திருந்தார்

இன்று (24.9.2024) பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.