இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டால் அதிருப்தி அடைந்த ஜப்பான் - 516 கோடி நஷ்டம்


கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் ஜப்பானிய கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு தொடருந்து திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்துள்ளது.

திட்டத்தை இரத்துச் செய்தமை தொடர்பில் விசேட கணக்காய்வின் போது தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை வழங்கப்பட்ட ஆலோசனைக் கட்டணங்கள் உட்பட எந்தவித முன்கூட்டிய விவாதமும் இன்றி திட்டத்தை இரத்து செய்ததால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஜப்பான் ஆலோசனை நிறுவனம் 516 கோடி ரூபாய் கோரியுள்ளது.

இந்த தொகையைச் செலுத்தாவிட்டால், குறித்த நிறுவனம் எதிர்காலத்தில் நடுவர் வழக்கிற்குச் சென்றால், முழு ஆலோசனைக் கட்டணம் மற்றும் இழப்பீடு போன்ற பெரும் தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் தொடக்கத்தில், 60,080,000 ஜப்பானிய யென் (ரூ. 10.4 கோடி) முன்கூட்டிய கட்டணமாக திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டு, திட்டம் முழுமையாக முடிக்கப்பட்ட பிறகு அந்தத் தொகையில் ஐம்பது சதவீதம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜப்பான் அரசாங்கத்திடம் இருந்து 2016 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) இந்தக் கடனை மானிய வட்டி அடிப்படையில் பன்னிரண்டு வருட கால அவகாசத்துடன் நாற்பது ஆண்டுகளில் செலுத்த வேண்டும் என  மூலம் ஒப்புதல் அழிக்கப்பட்டது.

கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் கருத்தின்படி, செப்டம்பர் 24, 2020 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின்படி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான தனது அவதானிப்புகளை முன்வைக்கும் போது, ​​குறிப்பாணையின் மூலம் எதிர்பார்க்கப்படும் தீர்மானங்களை ஆதரிப்பதற்கு அப்பால் அதன் சுயாதீனமான தொழில்முறை அவதானிப்புகளை வழங்குவதற்கு அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத் திட்டம் தொடர்பாக நவம்பர் 2022 இல் கணக்குத் தணிக்கையாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட விசேட தணிக்கை அறிக்கையில் இந்த உண்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன.