நாடளாவிய ரீதியிலுள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீடை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம்!

நாடளாவிய ரீதியிலுள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.தேசிய எரிபொருள் அட்டை முறைமைக்காக, இதுவரையில் 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 692 நிரப்பு நிலையங்களிலும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் 109 நிரப்பு நிலையங்களிலும், இவ்வாறு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுவரையில் பதிவுசெய்யப்பட்டுள்ள 44 இலட்சம் வாகனங்களில் 39 இலட்சத்து 45 ஆயிரம் 899 வாகனங்கள் பெற்றோலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

4 இலட்சத்து 91 ஆயிரத்து 756 வாகனங்கள் டீசலுக்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.அத்துடன் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 972 பாரவூர்திகளும், 29 ஆயிரத்து 755 பேருந்துகளும் 16 ஆயிரத்து 213 விசேட தேவை வாகனங்களும் 4 ஆயிரத்து  992 பிற வாகனங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.