பிரான்ஸ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பேரிடி - புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த முடிவு

மத்தியதரைக்கடலில் தொண்டு நிறுவனக் கப்பல் ஒன்றால் மீட்கப்பட்ட 234 புலம்பெயர்ந்தோரில் 44 பேரை நாடுகடத்த பிரான்ஸ் முடிவுசெய்துள்ளது.

நடுக்கடலில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை Ocean Viking என்னும் தொண்டு நிறுவனக் கப்பல் ஒன்று மீட்டது.

அந்த புலம்பெயர்ந்தோருக்கு இத்தாலி தன் நாட்டில் இடமளிக்காததால், அவர்களை ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் முன்வந்தது.

ஆனால், மீட்கப்பட்ட அந்த 234 புலம்பெயர்ந்தோரில் 44 பேரின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்பட இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பேசிய Darmanin, அந்த 44 புலம்பெயர்ந்தோரின் உடல் நலம் சீரானதும் அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்றார்.

மேலும், மற்றவர்களின் புகலிடக்கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டுவரும் நிலையில், யாருடைய புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமோ, அவர்களும் நாடுகடத்தப்படக்கூடும் என்றார் அவர்.