ட்ரம்பின் திட்டத்தால் இலங்கைக்கும் பேரிடி: வேலை பறிபோகும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்!

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியை முடக்க தீர்மானத்திருப்பது, இலங்கையின் அரச சாரா நிறுவனங்களை (NGO) நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு காரணமாக  இலங்கையில் 1000 இற்கும் மேற்பட்டோரின் வேலைகள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

போராடும் நிறுவனங்கள்

மனித உரிமைகள், நல்லாட்சி, பெண்கள் மற்றும் LGBTQ உரிமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் இலங்கையின் கணிசமான எண்ணிக்கையிலான அரசு சாரா நிறுவனங்கள் USAID ஆதரவுடன் செயற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க நிதி நிறுத்தத்தைத் தொடர்ந்து அவ்வாறான பல நிறுவனங்கள் தங்கள் திட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முதல் விதி

இந்த நடவடிக்கை, சர்வதேச மேம்பாட்டுத் திட்டங்களை விட உள்நாட்டு செலவினங்களுக்கு முன்னுரிமை அளிக்கும், “அமெரிக்காவின் முதல் விதி” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், ட்ரம்பின் குறித்த திட்டமானது, கண்மூடித்தனமாக உள்ளது என்றும் இதன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருப்பதாகவும் தொடர்ந்தும் நிதி முடக்கம் தொடர்ந்தால் பல திட்டங்கள் சரிந்துவிடும் எனவும் பாதிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.