மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகினார் டில்சான் மதுசங்க



இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து டில்சான் மதுசங்க விலகியுள்ளார்.

இந்த மாத ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற தொடரின் போது தொடை தசையில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு பதிலாக தென்னாபிரிக்கா இளையோர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச உலகக்கிண்ண தொடரின் போது, மொஹமட் சமி, அடம் ஷாம்பா மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் 20க்கும் அதிகமான விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

டில்சான் மதுசங்கவை 4.6 கோடி இந்திய ரூபாவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியின் இளையோர் அணியின் வேகப்பந்து வீச்சாளரான க்வேனா மபாகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.