சென்னை சூப்பர் கிங்ஸின்(Chennai Super Kings) விக்கெட் காப்பாளர் எம்.எஸ். தோனி ஏன் கடைசி நேரத்தில் துடுப்பெடுத்தாட வருகிறார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்(stephen fleming) தெரிவித்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடர் ஆரம்பித்தவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிம்(Ruturaj Gaikwad) தோனி(Dhoni) ஒப்படைத்தார்.
மேலும், அணியை ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்து வழிநடத்தி வருவதுடன் இறுதிக் கட்டத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.
அவர் இறுதி ஓவர் அல்லது அதற்கு முந்தைய ஓவரில் களம் இறங்குவதோடு இறங்கினால் சிக்ஸ் அல்லது பவுண்டரி அடிக்கின்றார். இதனால் அவர் முன்னதாக ஏன் களம் இறக்கப்படுவதில்லை? என்ற விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.
அவர் முன்னதாக களம் இறங்கினால் உடனே ஆட்டமிழந்துவிடுவார் என்ற எதிர் விமர்சனமும் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் எம்.எஸ். தோனி ஏன் கடைசி நேரத்தில் விளையாட வருகின்றார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.
“தோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் துடுப்பாட்டம் செய்ய முடியாது. அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம்.
அதனால்தான், போட்டியில் 2-4 ஓவர்கள் துடுப்பாட்டம் மற்றும் முழுவதுமாக கீப்பிங் செய்து புதிய அணித்தலைவராக அறிவுரைகள் வழங்கி வருகிறார். அதைத் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
தோனிக்கு மாற்றாக வேறொரு கீப்பர் அணியில் உள்ளார். ஆனால் அவர் தோனி ஆகிவிட முடியாது.
9-வது இடத்தில்தோனி களமிறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என நினைத்து விடாதீர்கள்.”என்று பிளமிங் தெரிவித்துள்ளார்.