குழந்தைகளுக்கான பால்,உணவுகள் வழங்கப்படும் போத்தல்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கண்டறிவு!

குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திரம் ஒத்துழைப்பில், தேசிய ஊழல் ஒழிப்பு வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக்காக இலங்கை, பங்களாதேஸ், சீனா, பூட்டான், மலேசியா, இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளில் இந்த பால் போத்தல்கள் மற்றும் உணவு தட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தற்போது ஐரோப்பிய சங்கத்தின் உறுப்பு நாடுகளிலும், மலேசியா, சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் குழந்தைகளுக்கான உணவு பாத்திரங்களில் குறித்த இரசாயனங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கையில் பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த பிஸ்பினோல் என்ற புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனம் உயர் மட்டத்தில் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் அவை தொடர்ந்தும் பாவனையில் உள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சலனி ரூபசிங்க தெரிவித்துள்ளார்.