நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு!

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் புதிதாக 733 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.நாடளாவிய ரீதியில் 47 சுகாதார வலயங்களின் வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயகரமான பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.யாழ்.மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 ஆயிரத்து 34 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.