நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்! சபையிலிருந்து வெளியேறிய ரணில்


தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியதை தொடர்ந்து அமைதியற்ற நிலை தொடர்ந்திருந்தது. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கடசி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். 

இந்த ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபையிலிருந்து வெளியேறியுள்ளார். 

இதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. 


இரண்டாம் இணைப்பு

தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றில் காரசாரமான விவாதம் ஏற்பட்டிருந்ததுடன் அமளிதுமளி நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறிக்கிட்டவர்களுக்கு “வாயை மூடிக்கொண்டு அமருங்கள்” என ஜனாதிபதி கோபமாக தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், தேர்தலை பிற்போடுங்கள், நாங்கள் கூச்சலிட்டு பின்னர் அமைதியாகி விடுகிறோம் என என்னிடம் பலமுறை கோரிக்கை விடுத்தவர்கள் தற்போது நான் தேர்தலை பிற்போடுவதாக என்மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் எனவும் ரணில் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 


முதலாம் இணைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று (23.02.2023) முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றில் ரணில் தற்போது விசேட உரையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.