எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.எரிபொருள் விலையை இந்த தருணத்தில் அதிகரிக்க வேண்டும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி எடுத்த தீர்மானத்துடன் ஒப்பிட்டே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.இதற்கமைய ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 121 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 124 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம், 92 எல்.பீ ரக பெட்ரோல் லீட்டரொன்று 7 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 184 ரூபாய் என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, 95 ஒக்டென் ரக பெட்ரோல் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 213 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.