தினேஷ் ஷாப்டரின் மரணம் - கொலையா.. தற்கொலையா..! ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் |


மர்மமான முறையில் இறந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் புலனாய்வாளர்களிடம் பல ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஷாப்டரின் மரணத்தின் போது, கழுத்தில் கட்டப்பட்ட வயரைப் போன்ற ஒரு வயர் அவரது வீட்டிலிருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்தபோது இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஷாப்டரின் கைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சில கேபிள் இணைப்புகள் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையின் நடுவில், ஷாப்டர் தற்கொலை செய்து கொண்டாரா என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்,

ஆனால் ஷாப்டரின் மரணம் குறித்த பிரேத பரிசோதனையின் படி, ஜிப்-வயர் கேபிளால் கழுத்தை நெரித்தமை தான் மரணத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத அடிப்படையில், இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை விசாரணைகள் நிராகரிக்கவில்லை,

இது தொடர்பாக ஒவ்வொரு கோணத்திலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றார்கள் என சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சம்பவம் நிஹால் தல்துவா தெரிவித்தார்.