கடவத்தையில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 70 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களில் எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது பதிவாகிய இரண்டாவது மரணம் இதுவாகும்.கண்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் சுமார் 5 மணித்தியாலங்கள் வரிசையில் நின்றிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            