இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கண்டியில் உள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையின் மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த குறித்த சடலத்தை இன்று (17) மைதானம் வந்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்சிவிப்பாளர் கண்டு உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

உயிரிழந்துள்ள குறித்த நபர் அதே பாடசாலையின் மைதானக் காவலாளியாக பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், தும்மோதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய உபுல் சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.