இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாய நிலைமை : உணவுப் பழக்கவழக்கமே காரணம்


மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றா நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரில் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

2010 ஆம் அண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்திலேயே மாரடைப்பு காரணமாக அதிகளவானோர் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மக்கள் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களே இதற்கான பிரதான காரணமாகும் என தொற்றா நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரில் பாலசூரிய தெரிவித்துள்ளார்.