முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவியேற்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.நேற்று (24) மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.இந்த மாத தொடக்கத்தில் பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக இருந்த பதவிக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இதனை அடுத்து கடந்த ஆம் இம்மாதம் 10 திகதி அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.இருப்பினும் தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக 5 அடிப்படை உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த ஐந்து மனுக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் இந்த வார தொடக்கத்தில் தள்ளுபடி செய்திருந்தது.இதனை அடுத்து பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா கடந்த செவ்வாய்க்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.