காவடியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் மீது வாள் வெட்டு

அம்பாந்தோட்டை - நோனாகம, உஸ்ஸங்கொட விகாரையின் பெரஹராவில் காவடியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளதாக {ஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாந்தோட்டை, உஹபிட்டகொட பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரொருவரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாளானது மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்திக்கான காரணம், இதுவரை கண்டறியப்படவில்லையெனவும்,