நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை (Jeevan Thondaman) கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா (Nuwara Eliya) - பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட தரப்பினர் முன்னிலையாகததை அடுத்து நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்புடைய தொழிற்சாலையினுள் அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர், அத்துமீறி நுழைந்ததாக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தினரால் நுவரெலியா காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட தரப்பினரை இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக அழைப்பு விடுத்திருந்த போது அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட குழுவினர் முன்னிலையாகவில்லை.
இந்நிலையில், வழக்கில் முன்னிலையாகத அமைச்சர் ஜீவன் உள்ளிட்ட தரப்பினரை கைது செய்து எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.