மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்தவுக்கான நீதிமன்ற உத்தரவு

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக அமைச்சர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று  இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டேகு சரத்சந்திர  சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும் விசாரணை முடியும் வரை இந்த இடைக்காலத் தடை அமலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது