முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவாலுக்கு (Anupa Pasqual) சொந்தமான வங்கிக்கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகமையவே இவருக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
கொக்கல மற்றும் மத்துகம வங்கிக் கிளைகளிலுள்ள இவருக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 4 2025 வரை கணக்குகள் முடக்கப்பட்டிருக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.