உயிரிழந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி வாழும் தம்பதி

அமெரிக்காவில் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமது குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி அதனுடன் வாழ்ந்து வருகின்றனர் பெற்றோர்.

அரியவகை நோய் பாதிப்பால் உயிரிழந்த 15 மாதக் குழந்தையின் சாம்பலையே கற்களாக மாற்றறியுள்ளனர் இந்த பெற்றோர்.

TBCD என்ற என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை பாப்பி, 9 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் குழந்தை தற்போது உயிருடன் இல்லை.

ஆனால், அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 15 மாதக் குழந்தை பாப்பியின் சாம்பலை கற்களாக மாற்றி தங்களுடன் வைத்து கைல் – ஜேக் தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கற்களை குழந்தையின் நினைவாக வைத்திருப்பதாகவும் இந்தக் கற்கள் மூலம் பாப்பியுடன் இருப்பது போல உணர்வதாக வும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.