நாட்டில் மீண்டும் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்று!

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றதோடு தினமும் சுமார் 60 வரை நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு இதுவரை 16,535 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு ஜூலை 22ம் திகதி மாத்திரம் 68 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மரணமடைந்த நபர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததாலும் வைத்தியசாலைகளில் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் நோய்த்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை சமூக இடைவெளியை பேணாததாலும் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணியாததாலும் வரிசையில் நிற்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.