குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று!

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதேவேளை அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.