எரிவாயு தட்டுப்பாடு-தீர்வு குறித்து ஆராய கோப் குழு அழைப்பு!

தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான தீர்வுகள் குறித்து விசாரிப்பதற்காக லிட்ரோ எரிவாயுவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு விடுத்துள்ளது.அதன்படி இன்று முற்பகல் 11.00 மணிக்கு கோப் குழுவில் ஆஜராகுமாறு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அது தொடர்பான தீர்வுகள் மற்றும் எரிவாயு கப்பல் நாட்டிற்கு வரும்போது விநியோகம் மேற்கொள்ளப்படும் விதம் குறித்து இதன்போது விசாரிக்கப்படும்.கப்பல்கள் வந்த போதிலும் எரிவாயு விநியோகம் தாமதமானது தொடர்பில் உரிய நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.