தொடரும் போர் பதற்றம்! காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் தொடர்



இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு தொடரை காலவரையறையின்றி ஒத்திவைக்க  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.

அத்துடன் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நலன் கருதியும்  பாதுகாப்பு கருதியும் போட்டிகள் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இமாச்சல்- தரம்ஷாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி இரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணி வீரர்களையும் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பரபரப்பாக நடைபெற்று வந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை 57 போட்டிகள் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.