நாட்டின் விவசாயிகளைப் பயன்படுத்தி பாரிய மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையின் அரச புலனாய்வு துறை எச்சரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அதிபர் இந்த விடயத்தை அமைச்சரவைக்கு அறிவித்ததாக குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், 2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் இயக்கத்தை போன்று மக்கள் போராட்டத்தை உருவாக்க குழுவொன்று முயற்சிப்பதாக அதிபர் தெரிவித்ததாகவும் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வறட்சி நிலைமைகள், விவசாயிகளின் நிலை, மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்ற காரணங்களை இந்த போராட்டத்திற்குக் காரணங்களாகக் கொள்ள குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, “அரகலய” மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு தரப்பினரால் இந்த போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு துறை சுட்டிக்காட்டியுள்ளது.