கொழும்பின் பல பகுதிகளிலும் திடீர் மின்வெட்டு-இருளில் மூழ்கிய கொழும்பு!

கொழும்பின் பல பகுதிகளிலும் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.கொழும்பு 10 – போதிராஜா மாவத்தை, கொழும்பு 13, கொழும்பு 14 உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த மின் வெட்டு நீடித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.