சமூகவலைதளங்களில் பல சுவாரசியமான வீடியோக்கள் பிரபலமாக அதிகம் பகிரப்படும்.
அந்த வகையில் காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலியும் காடுகளின் ராஜா என புகழப்படும் சிங்கமும் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த சண்டையின் போது நாய் ஒன்று இரு மிருகங்களையும் சமாதானம் செய்ய முயல்கிறது.
அதன்படி தனது வாயால் மிருகங்களை இழுத்து சண்டையைத் தீர்க்க முயற்சிக்கிறது.
நாயின் துணிச்சலைப் பார்த்து இணையவாசிகள் சுவாரஸ்யமாக பதிவிட்டு வருகின்றனர்.