போராட்டக்களத்தில் குழுக்களிடையே மோதல் - நால்வர் காயம்!

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட  மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.கொழும்பு -15ஐ சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.குறித்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ம் இலக்க வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன