மஹிந்தவை சந்தித்த பின்னர் திடீரென ரணிலை சந்தித்த சீனத் தூதுவர் : தெற்கு அரசியலில் சலசலப்பு


இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீனத் தூதுவரின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலுமான அரசியல் நிலைமைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில், சீனத் தூதுவருக்கிடையிலான கலந்துரையாடலின் போது  கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள அவரது இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், சீனத் தூதுவருடன் இது போன்ற ஒரு கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

மேலும், மற்றொரு உயர்மட்ட முன்னாள் அரசியல்வாதியுடனும் சீனத் தூதுவர் எதிர்காலத்தில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுடனான சீனத்தூதுவரின் திடீர் சந்திப்பானது உள்நாட்டு அரசியலில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு தெற்கு அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.