சீனாவில் முதல் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஆட்டுக்குட்டி - வைரலாகும் காணொளி

உலகில் அறிவியல் சார் வியப்பூட்டும் சம்பவங்கள் தினந்தோறும் நடந்த வண்ணமே உள்ளது.

அந்தவகையில் சீனாவில் முதல் முறையாக உயிரணு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 2 ஆட்டுக் குட்டிகள் குறித்த செய்திகள் தற்போது வைரலாக பரவிவருகின்றது.

சீனாவின் ஜிங் ஹாய் மாநிலத்தில் இந்த ஆட்டுக் குட்டிகள் பிறந்துள்ளன.

அத்துடன், சீனாவின் நோர்த்வெஸ்ட் ஏ அண்ட் எப் பல்கழைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழுவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிறந்த முதலாவது ஆட்டுக் குட்டி, 3.4 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதென இந்த குளோனிங் முறையில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரணு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆட்டுக்குட்டிகள் குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.