விடுதலைப் புலிகளைப் போல காட்டப்படும் சிறுவர்கள்: நாட்டை பறித்தது நாமா... தேரரின் இனவாத பேச்சு

வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தின்போது, விடுதலைப் புலிகளைப் போல உடை அணிவித்து சிறுவர்களை அழைத்து வந்துள்ளனர்.  இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அத்துடன், எமது தரப்பினர் இந்த சிறுவர்களின் நாட்டை பறித்ததை போன்ற எண்ணத்தை சிறுவயதிலேயே, அவர்களுக்குள் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் திணிப்பார்கள் என்று சிங்களராவய  அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டடார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

இலங்கையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. இவற்றை பாதுகாப்பதற்கான சட்டங்கள் உள்ளன. இதற்கமைய, நீதிமன்ற உத்தரவின்றி, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிக்கப்பட்டால், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய முடியும். இவ்வாறாக கைது செய்யப்படுபவர்களை இலகுவாக பிணையில் விடுதலை செய்ய முடியாது.

எனினும், வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியில் நீதி சரிவர செயல்படாதுள்ளது. அரசியல் காரணங்கள் காரணமாக குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.

அண்மையில் வடக்கு கிழக்கில் விடுதலப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வொன்று இடம்பெற்றது. இது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் நினைவேந்தல்களை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது. விடுதலைப் புலிகளின் சமாதிகளை வைத்து இந்த நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை போன்று அங்குள்ள சிறுவர்களுக்கு ஆடை அணிவித்து இந்த நினைவேந்தல் நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தவறான உதாரணங்களை இதன் மூலம் காட்டுகிறார்கள்.

அத்துடன், எமது தரப்பினர் இந்த சிறுவர்களின் நாட்டை பறித்ததை போன்ற எண்ணத்தை சிறுவயதிலேயே, அவர்களுக்குள் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் திணிப்பார்கள்.

இந்த நிலையில், இவ்வாறாக முன்னெடுக்கப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை முப்படையினர் எடுக்க வேண்டும். இலங்கையில் நீதி சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதை பாதுகாப்பு படையினர் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.