டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் : மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்


இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (29) நாணயமாற்று வீகிதத்தினை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.29 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 371.71 ரூபாவாக காணப்படுகிறது.

ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 430.42 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 447.38 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குவைத் தினாரின் பெறுமதியானது 1180.40 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 99.41 ரூபாவாக காணப்படுகிறது.