கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்தது இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியால் கோடிக்கணக்கான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் (23.85 கோடி) நாணயத்தாள்களை கடந்த ஆண்டு மத்திய வங்கி அழித்துள்ளது. 

மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022இல் அழிக்கப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 207.3 பில்லியன் ரூபா (20730 கோடி ரூபா) என தெரியவந்துள்ளது.

நாட்டில் சிதைக்கப்படாத மற்றும் தரமான நாணயத்தாள்களின் புழக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி அவ்வப்போது சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை அழித்து வருகிறது.

மத்திய வங்கி 2021இல் 108.2 மில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அழித்ததுடன் அதன் பெறுமதி 44.3 பில்லியன் ரூபாவாகும்.

இதேவேளை 2020ஆம் ஆண்டில் 127.3 மில்லியன் மதிப்பிழந்த நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுமதி 62.2 பில்லியன் ரூபாவாகும்.

மேலும், 2019ஆம் ஆண்டில், 139.8 பில்லியன் ரூபா பெறுமதியான 235 மில்லியன் நாணயத்தாள்கள் மத்திய வங்கியினால் அழிக்கப்பட்டுள்ளன.