மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்த கரட்டின் விலை

சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் மீண்டும் விலை திடீரென உயர்ந்துள்ளது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையால் இன்று (23.01.2024) வெளியிடப்பட்ட விலை பட்டியலிலேயே குறித்த விலை நிலவரம் வெளியாகி உள்ளது.

விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த காலங்களில் 2000/= ரூபாவுக்கு அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை கடந்த மூன்று நாட்களாக கிலோவுக்கு 900/= ரூபாயாக  விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்டு அதை நுகர்வோருக்கு 950/=ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை விலை மீண்டும்  உச்சம் பெற்றுள்ளது.


கரட் ஒரு கிலோ கிராம் விவசாயிகளிடம் 1130/= ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டு அதை 1180/=ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.