இலங்கையினதும், இலங்கை மக்களினதும் எதிர்கால வெற்றியை முன்னிறுத்தி நான் எதிர்வரும் ஜனாதிபதித ;தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குகின்றேன் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இவ்வறிப்பை வெளியிட்ட அவர், தான் அமைச்சுப்பதவியைத் தொடர்ந்து வகிப்பேன் எனவும் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அவர் வொயிஸ்
இவ்வாண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தல் நம்மனைவரினதும் எதிர்காலத்தையும், விதியையும் தீர்மானிக்கக்கூடிய மிகமுக்கிய திருப்புமுனை என்பதை நினைவிலிருத்தியே நீங்கள் வாக்களிக்கவேண்டும்.
உங்களது விதியைத் தீர்மானிப்பதற்கான உரிமையை அரசியல்வாதிகளிடம் கையளித்துவிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பதன் விளைவாக துன்பம் மாத்திரமே மிஞ்சியிருக்கிறது.
இந்த உலகம் மாற்றமடைவதைக் காண்பதற்கு நீங்கள் விரும்பினால், அந்த மாற்றத்தை உங்களாலேயே ஏற்படுத்தமுடியும். அதற்குத் தயாராகுங்கள்.
அதன்பிரகாரம் இலங்கையினதும், இலங்கை மக்களினதும் எதிர்கால வெற்றியை முன்னிறுத்தி நான் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குகின்றேன் என்றார்.
இதேநேரம் மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடுவதாகவும், இலச்சினை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டணி இன்னமும் உருவாக்கப்படாத நிலையில், எதிர்வருங்காலத்தில் பல்வேறு கட்சிகளை உருவாக்கி இக்கூட்டணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் 10 சதவீதமானோர் அழிவை விரும்புகின்ற போதிலும், 90 சதவீதமானோர் தமக்கு ஆதரவாக இருப்பர் எனவும் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேநேரம் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதை அவர் தனது ஓ கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.