இலங்கையர்களுக்கு பேரிடி - அவுஸ்திரேலியா அரசின் அதிரடி நடவடிக்கை

கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களின் Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள(onshore) 50 இலங்கையர்கள் தமது Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களை தாக்கல் செய்திருந்ததாகவும், இவ்விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முதல் சமர்ப்பிக்கப்பட்ட 8 இலங்கையர்களின் விண்ணப்பங்களும் கடந்த நவம்பர் 1ம் திகதியிலிருந்து 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் மொத்தம் 1,643 புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் நாடுகளின் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.