பேருந்து கட்டணத்தில் மாற்றமா..! வெளியான புதிய அறிவித்தல்

ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் இருக்காது என தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று அறிவித்துள்ளது.

ஜூலை மாதம் நடைபெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் போது பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என NTC தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள பேருந்து கட்டணங்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் மாற்றமின்றி தொடரும் என்றும் வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பணவீக்கம், ஒரு லிற்றர் டீசல் விலை, பராமரிப்பு செலவுகள் மற்றும் இதர உதிரி பாகங்களின் விலை உள்ளிட்ட பல காரணிகளை கணக்கில் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் 01 ஆம் திகதி வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.