நீர் நிலையில் வீழ்ந்து கோர விபத்துக்குள்ளான பஸ் - 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்..!

வரகாபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரகாபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாலபே – ராஹுல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வரகாபொல பகுதியிலுள்ள நீர் நிலையொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.