பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரதன தேரரை கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
பத்தரமுல்லே சீலரதன தேரர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத் தந்த வேளை அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள் அந்த இடத்தில் இருந்து அவரை விரட்டியுள்ளனர்.
https://twitter.com/Kavinthans/status/1510921264780570627?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1510921264780570627%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Fpeople-who-went-to-the-protest-and-expelle-1649067546
அவருக்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க பொதுமக்கள் மறுத்துள்ளனர்.
உங்களை போன்றவர்கள் காரணமாகவே நாங்கள் இன்று துன்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றோம், தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள், வணங்கி கேட்டுக்கொள்கிறோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் கூறியுள்ளார்.
“ நீங்கள் இந்த இடத்தை விட்டு செல்லுங்கள், இங்கு சாதாரண மக்களே இருக்கின்றனர். கொள்ளை கூட்டம் ஒன்றுக்கு வாக்களித்து, தற்போது எமக்கு சமையல் எரிவாயு இல்லை.
நீங்கள் தற்போது பேசி பயனில்லை இங்கிருந்து தயவு செய்து செல்லுங்கள். இங்கிருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வேண்டாம்”என ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள். தெரிவித்தனர்.
போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, பத்தரமுல்லே சீலரதன தேரர் போராட்டத்தை கைவிட்டு வெளியேறினார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            