யாழில் வர்த்தக நிலையத்தை உடைத்து அரிசிமூட்டை திருட்டு!

யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூட்டை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி மேற்கில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.