இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த முடியாது..! தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு


ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் தேர்தல் நடத்தும் முறைப்படி அது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் இருப்பதாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை அடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு மட்டுமே வழங்கப்படும்.

ஆனால் பொதுத் தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்துவது குறித்தும், அங்கு வாக்களிப்பது குறித்தும் இந்த நாட்டில் உள்ள வாக்காளர்களுக்கு சரியான தெளிவு இல்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துமாறு இதுவரை எந்தக் கட்சியும் தம்மிடம் கோரவில்லை தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.