வவுனியா பஜார் வீதியில் ஆணொருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.வீதியோரத்தில் கடையொன்றின் வாயிலில் இரத்தம் வெளியேறிய நிலையில் சடலம் காணப்பட்டதை அவ்வீதியால் சென்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கி தகவலை அடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.குறித்த நபர் அப்பகுதியில் நாட்டாமை (பொதி சுமக்கும்) தொழில் செய்பவர் என தெரியவரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            