பறவையின் ஒற்றை இறகு சாதனை விலைக்கு ஏலம்


தற்போது அழிவடைந்திருக்கும் நியூசிலாந்தின் ஹூயா பறவையின் ஒற்றை இறகு உலக சாதனை தொகையாக 28,417 டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது.

இந்த இறகு 3,000 டொலர்கள் வரை விலைபோகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே இதே பறவையினத்தின் இறகு ஒன்று முன்னர் படைத்த சாதனையை விட 450 வீத அதிக விலைக்கு ஏலம்போய் இருப்பதாக வெப்ஸ் ஏல நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹூயா பறவையை மோரா இன மக்கள் புனிதமாக கருதுகின்றனர். அதன் இறகுகளை பெரும்பாலும் தலைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கிரீடமான அணிகின்றனர். கடைசியாக இந்த பறவையை கண்டதாக உறுதி செய்யப்பட்டது 1907 ஆம் ஆண்டிலாகும் அதற்கு இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் பறவையை கண்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் இருப்பதாக நியூசிலாந்து அருங்காட்சியகம் குறிப்பிட்டுள்ளது.