விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ(Isro) அமைப்பு தெரிவித்துள்ளது.
இது விண்வெளியில் விவசாயம் செய்யும் முயற்சியின் முதல் வெற்றியாக பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தச் பரிசோதனையின் வெற்றி, விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் இந்தியாவின்(India) வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது .
விண்வெளியில் விவசாயம்
இந்த சோதனையானது, குறைந்த புவியீர்ப்பு விசையில் தாவரங்களின் வளர்ச்சியை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள உதவும், இது நீண்ட விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்நிலையில், PSLV C-60 செட்டிலைட்டின் துணைக்கோளான VSSC விண்கலத்தில், காராமணி விதைகள் முளைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள இஸ்ரோ, "விரைவில் இலைகள் உருவாகும்" என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், "காராமணி விதைகள் முளைவிட்டன, முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கிறோம்.
7 நாள்களுக்குள் விதை முளைவிடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 நாட்களிலே முளைத்துள்ளன.
வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன்கட்ட பரிசோதனை இதுவாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.