2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிக்கு மக்களால் நையப்புடைப்பு : தாக்கியவர்களை கைது செய்த பொலிஸார்

கொழும்பு, நவகமுவை, ரக்சபான வீதி பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

குறித்த மூவரும் விகாரைக்குள் தகாத உறவில் ஈடுபட்ட நிலையில் பிரதேச மக்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரதேச மக்களால் மூவரும் ஒப்படைக்கப்பட்டுள்னர்.

இதேவேளை பிக்கு உள்ளிட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த விகாரையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த தேரர் மற்றும் பெண் ஒருவரும் சிகிச்சைக்காக நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய பெண் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக சில பௌத்த துறவிகளின் பாலியல் ரீதியாக எழும் சர்ச்சைகள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் சில தினங்களுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.