இலங்கைத் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
The Hundred Men's Competition தொடரில் நோர்தென் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, மைதானத்தை விட்டு வெளியேறினார்.
 
இந்நிலையில் அவர், இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்தது.
 
உபாதை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பாகவுள்ளது.
 
இந்த தொடருக்கான குழாமிலிருந்து ஷெக் கிரவ்லே ஏற்கனவே விலகியுள்ளதுடன், பென் ஸ்டோக்ஸ் உபாதை காரணமாக நீக்கப்பட்டதினால் இங்கிலாந்து அணிக்கு இதுவொரு பாரிய இழப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் தொடருக்கான தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்டவீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 16 ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவதககவும், மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவு வரை இவர் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் கட்டபாட்டுசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
 

தற்போதைய நிலைமைகள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளுடன் வீரர்களுக்கு உதவ உள்ளூர் அறிவு கொண்ட ஒரு நபரை அழைத்து வர இயானை நியமித்தோம். 

இயன் இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் அதிகம், மேலும் அவரது உள்ளீடுகள் இந்த முக்கியமான சுற்றுப்பயணத்தில் எங்கள் அணிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.