இலங்கையில் பிரபல பாடகர் பாத்திய ஜெயக்கொடி மற்றும் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகளை கைது செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
வேரஸ் கங்கா திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு தொடர்பில் இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
ஆணைக்குழுவில் முறைப்பாடு
குறித்த திட்டம் செயல்முறையை மேற்கொள்ளாமல் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் 27.6 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடகர் பாத்திய நடத்தும் ஷோட்டவுட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த ஆட்சியின் போது அது குறித்து எந்தவித விசாரணையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகுளை கண்டுகொள்ளாத பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.