ரணிலின் அரசியல் என்பது கைகளில் இரத்தக் கறை படிந்த அரசியலாக காணப்படுவதாக மக்கள் போராட்ட முண்ணனியின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டலந்த விவகாரத்தை ரணில் விக்ரமசிங்க மறுக்கவில்லை. மாறாக அந்த அறிக்கையைத்தான் நிராகரித்துள்ளார் எனவும் லஹிரு வீரசேகர கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பட்டலந்த மற்றும் ஏனைய வதைமுகாம்களை நடத்தவில்லை என்று யாரும் கூற முடியாது.
ரணில் விக்ரமசிங்கவும் அப்படிப்பட்ட செயலை செய்யவில்லை என்று சொல்லவில்லை. பட்டலந்த தொடர்பான அறிக்கையை நிராகரிப்பதாகத்தான் கூறுகின்றார்.
பரிந்துரை
எனவே, இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆணைக்குழுவை நியமிக்காது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானங்களை முன்னெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து தனிநபர் ஒருவரை இலக்கு வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            