உள்ளூராட்சித் தேர்தலை நடத்த விரும்பும் பசில், நெருக்கடிக்கு மத்தியில் தவிர்க்க கோரும் மூத்த அமைச்சர்கள் !

கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கு முதலில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சுக்கள் மத்தியில் நிதி அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இருப்பினும் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தலுக்கு தயாராகவில்லை என கூறி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி நெருக்கடி, அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் பிரச்சினை என்பன நாட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியே அவர்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேவேளை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைகள் மற்றும் பிளவுகள் காரணமாக அவர்களும் தேர்தலுக்கு பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.